MTA Events


பள்ளி ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா – 2023

மாணவர்களே மற்றும் பெற்றோர்களே, வருகின்ற மே மாதம் 20-ஆம் தேதி சனிக்கிழமை,அன்று, நம் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. பள்ளியின் கலை மற்றும் இலக்கிய விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு, நம் மூத்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றி கூறும் விழாவாக இது அமையும். இந்த விழாவில், மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர்கள் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன. நம் பள்ளியின் இந்த விழாவில், அனைவரும் பங்கு கொண்டு சிறப்பிக்குமாறு பள்ளி நிர்வாக குழு சார்பாக நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் நாட்காட்டியில் மே மாதம் இருபதாம் தேதியை நம் பள்ளி ஆண்டு விழாவிற்காக ஒதுக்கி கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இடம்: Rocky Hill நடுநிலைப் பள்ளி
நாள்:சனிக்கிழமை, 20-May-2023
நேரம்: மதியம் 1 மணி முதல் மாலை 8 மணி வரை (விரிவான விழா நிகழ்ச்சி நிரல் விரைவில் அறிவிக்கப்படும்)

We would like to inform you that the 2023 MTA Annual Day event at Rocky Hill Middle School has been scheduled for Saturday, May 20th, 2023. This event promises to be a memorable one, featuring the graduation ceremony, the distribution of prizes for Art and Literary competitions, recognition of Volunteer Teachers, the presentation of medals to all students who attended the school this year, and various engaging performances.

We kindly request parents reserve this date in their calendars.

Venue: Rocky Hill Middle School, 22401 Brick Haven Way, Clarksburg, MD 20871
When: Saturday, 20 May 2023
Time: From 1:00 PM to 8:00 PM (Agenda and detailed schedule of events will be updated soon)

விழா கலை நிகழ்ச்சிகளுக்கான பதிவு / Cultural Events registration form:

பதிவுக்கு இங்கே சொடுக்கவும்.

To participate in the cultural event, click the above link to register.


தமிழ்க் கலை இலக்கியப் போட்டிகள் – 2023

Tamil Art & Literary Competitions – 2023


போட்டி முடிவுகள்:

  • போட்டிகளில் வெற்றி பெற்ற/பரிசு பெறுபவர்கள் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்கள் மற்றும் ஊக்கப் பரிசு பெறுபவர்களின் விபரம், பள்ளி ஆண்டு விழா அன்று (சனிக்கிழமை, 20-May-2023) அறிவிக்கப்படும்.
  • ஓவியப் போட்டி & எழுத்துப் போட்டி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும்.
  • Please note, only winners are listed here. The winner positions (1st, 2nd, 3rd, and consolation) will be revealed at the MTA Annual Day event on Saturday, 20 May 2023.
  • Results for Drawing & Tamil Writing competitions will be announced soon.

தமிழ்க் கலை இலக்கியப் போட்டிகள் – 2023 புகைப்படங்கள் / MTA Tamil Arts and Literary Competition 2023 – Pictures

நம் பள்ளியின் கலை மற்றும் இலக்கியப் போட்டிகளைச் சிறப்பாக நடத்திக் கொடுத்த தன்னார்வலர்கள், போட்டி நடுவர்கள், பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும், பள்ளி நிர்வாகக் குழு சார்பாக மிக்க நன்றி!

பெற்றோர்கள், கலை மற்றும் இலக்கியப் போட்டிகளின் பொது எடுத்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர, “events@marylandtamilacademy.org“-என்கிற மின்னஞ்சலில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.